/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏறு தழுவுதல் அரங்கிற்கு பாதை அமைக்க தடை கோரி வழக்கு
/
ஏறு தழுவுதல் அரங்கிற்கு பாதை அமைக்க தடை கோரி வழக்கு
ஏறு தழுவுதல் அரங்கிற்கு பாதை அமைக்க தடை கோரி வழக்கு
ஏறு தழுவுதல் அரங்கிற்கு பாதை அமைக்க தடை கோரி வழக்கு
ADDED : பிப் 09, 2024 04:46 AM
மதுரை: அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கிற்கு விவசாய நிலம் வழியாக பாதை அமைக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு தரப்பிடம் அதன் வழக்கறிஞர் விபரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை நாராயணபுரம்கருப்பசாமி தாக்கல் செய்த மனு: கீழக்கரையில் அரசு சர்பில் கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஜன.,24ல் முதல்வர்ஸ்டாலின் திறந்து வைத்தார். அருகே எனது தென்னந்தோப்பு உள்ளது.
ஜன.,24ல் மட்டும் காளைகள் வெளியேறும்போது எனது நிலத்தின்வழியாக கொண்டுசெல்ல அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி கோரினர். அனுமதித்தேன். அன்று காளைகளை மரங்களில் கட்டிவைத்தனர். மரங்கள், தண்ணீர் குழாய்கள் சேதமடைந்தன.
அரங்கின் சுற்றுச்சுவரில் கேட் அமைத்து காளைகள் வெளியே செல்ல எனது நிலத்தை நிரந்தர பாதையாக பயன்படுத்த அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்னிடம் அனுமதி பெறவில்லை. இதனால் விவசாயம், வாழ்வாதாரம்பாதிக்கும். கலெக்டருக்கு மனு அனுப்பினேன். எனது நிலம் வழியாக பாதை அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.பவானி சுப்பராயன்: கலெக்டரிடம் விபரம் பெற்று அரசு வழக்கறிஞர் பிப்.,23ல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

