/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வட்டாரத்திற்கு ஒரு சேகரிப்பு மையம்
/
வட்டாரத்திற்கு ஒரு சேகரிப்பு மையம்
ADDED : ஜூலை 13, 2025 04:33 AM
மதுரை: வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் விவசாயிகளின் விளைபொருட்களை சேகரித்து விற்பதற்காக வட்டாரத்திற்கு ஒரு பொதுசேகரிப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இத்துறையின் கீழ் உள்ள 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் அனைத்து வகையான விளைபொருட்கள் மறைமுக ஏலம், தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ- நாம்) மூலம் விற்று கொடுக்கப்படுகிறது.
தற்போது 13 வட்டாரத்திற்கு தலா ஒரு பொது சேகரிப்பு மையம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. அந்தந்த வட்டார விவசாயிகள் அனைத்து வகையான விளைபொருட்களை இங்கு வைக்கலாம். வியாபாரிகள் பொருளின் தரத்திற்கேற்ப சரியான விலையை நிர்ணயிப்பர். இதன் மூலம் விவசாயிகளுக்கு சரியான லாபம் கிடைக்கும்.
விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அல்லது வட்டார வேளாண் வணிக உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது மதுரை அண்ணாநகர் உழவர் சந்தையில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்துள்ளார்.