/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நுாலிழையில் தப்பிய மாற்றுத்திறனாளி
/
நுாலிழையில் தப்பிய மாற்றுத்திறனாளி
ADDED : ஜூலை 17, 2025 12:36 AM
மதுரை:மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்று பிளாட்பாரத்தில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளியை போலீசார் மீட்டனர்.
நாகர்கோவில் - கோவை ரயில் (22667), நேற்று மதியம் 1:33 மணிக்கு ஸ்டேஷனின் முதல் பிளாட்பாரத்திற்கு வந்தது. 1:40 மணிக்கு கிளம்பிய போது, 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளி ஒருவர், ரயிலின் பின்புறமுள்ள மாற்றுத்திறனாளி பெட்டியில் ஏற முயன்றார். நிலைதடுமாறி பிளாட்பாரத்தில் விழுந்தார்.
உடனே பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிள் கண்ணன், விரைந்து சென்று அவரை மீட்டார். ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்க இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. அவரை பயணிகள் உதவியுடன் பாதுகாப்பாக அதே ரயிலில் அனுப்பி வைத்தார்.

