UPDATED : அக் 26, 2026 06:21 PM
ADDED : அக் 26, 2026 06:16 PM

அ நிறம் | அளவு
அலங்காநல்லூர்: ‘சின்னஇலந்தை குளத்தில் பராமரிப்பின்றி பாழடைந்து வரும் குளியல் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்‘ என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இங்குள்ள பஸ்ஸ்டாப் அருகே எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. பயன்பாட்டுக்கு திறந்த ஓராண்டுக்குள் மோட்டார் பழுதானதால் பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. குப்பை நிறைந்து துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
சமூக விரோதிகள் மது அருந்தவும், தெரு நாய்களின் வசிப்பிடமாகவும் மாறிவிட்டது. புதிய தொட்டியிருந்தும் பயன்படுத்த முடியாததால் அப்பகுதியினர் சிரமமடைகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
