ADDED : மார் 18, 2024 07:15 AM
அழகர்கோவில் : கள்ளழகர்கோயில் பங்குனி மாத நிறைவு நாளில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சி திருக்கல்யாணம். இது பல சிறப்புக்களை பெற்றுள்ளதாக தலைமை பட்டர் அம்பி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஆண்டாண்டு காலமாக நடக்கும் இத்திருக்கல்யாணம் 3 நாட்கள் நடைபெறும். இதன் சிறப்பு அம்சம் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தர வல்லி தாயார், ஆண்டாள், ஆகிய நான்கு பிராட்டிமார்களுடன் இந்த வைபவம் நடைபெறும். ஊஞ்சலில் வைத்து நடைபெறுவதே இதன் தனிசிறப்பு. அத்துடன் இத்திருக்கல்யாணம் பெரியாழ்வார் முன்னிலையில் நடைபெறுவதும் சிறப்பு.
இந்தாண்டு மார்ச் 22ல் தொடங்கி மூன்று நாட்கள் வெளிப் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடாகி மார்ச் 25 அன்று காலை 6:15க்கு மேல் 7: 00 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார்.
காலை 9:10 க்கு மேல் 9:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். மதுரை மாவட்டத்தில் இதுபோல் தனிசிறப்பு மிக்க திருக்கல்யாணம் நடப்பது கள்ளழகர் கோயிலில் மட்டுமே என்றார்.

