/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆண்டு முழுவதும் பூக்கும் பூந்தோட்டம் கள்ளழகர் கோயிலில் பணி தீவிரம்
/
ஆண்டு முழுவதும் பூக்கும் பூந்தோட்டம் கள்ளழகர் கோயிலில் பணி தீவிரம்
ஆண்டு முழுவதும் பூக்கும் பூந்தோட்டம் கள்ளழகர் கோயிலில் பணி தீவிரம்
ஆண்டு முழுவதும் பூக்கும் பூந்தோட்டம் கள்ளழகர் கோயிலில் பணி தீவிரம்
ADDED : ஜன 08, 2024 05:07 AM

அழகர்கோவில், : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் 1.5 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் பூக்கும் பூந்தோட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் ஏழுபிரகாரங்களைக் கொண்ட கோயில்கள் முழுமையானதாகவும் உத்தமமானதாகவும் கருதப்படுகிறது. அதில் கள்ளழகர்கோயிலும் ஒன்று. இதில் நான்காம் பிரகாரமாக வசந்தமண்டம் உள்ளது. இதன் பின்புறம் உள்ள இடத்தை சுத்தம் செய்து பூந்தோட்டம் அமைக்கும் பணிநடந்து வருகிறது.
சுந்தரராஜ பெருமாள், கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகிய அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் தினசரி மலர்மாலைகள் இந்த பூந்தோட்டத்திலிருந்து கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் பாரிஜாதம், நந்தியாவட்டம், மகிழம்பூ, நான்குவகை வண்ண விருச்சி உள்ளிட்ட பூச்செடிகள் நடப்படும். இங்கு ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மையுள்ள செடிகள் வைக்கப்படுகிறது. இவை ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.
இதர பூஜைக்குரிய மலர்கள், மாலைகள் கட்டுவதற்கு தேவையான 200க்கும் மேற்பட்ட பூச்செடிகள் பூந்தோட்டத்தில் நடப்படும். ஆறு மாதங்களுக்குப் பின், தினசரி பூஜை வழிபாட்டுக்குத் தேவையான அனைத்து பூக்களும் இந்த தோட்டத்தில் இருந்தே கிடைக்கும். ஜன.12 கூடார வெள்ளி அன்று பூச்செடிகள் நடவு மேற்கொண்டு பூந்தோட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளது. தோட்ட பராமரிப்புக்கும், பூக்கள் கட்டவும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.