/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கப்பலுார் சந்திப்பில் மேம்பாலம் அவசியம்
/
கப்பலுார் சந்திப்பில் மேம்பாலம் அவசியம்
ADDED : நவ 17, 2025 02:09 AM
மதுரை: தமிழ்நாடு குடி மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில தலைவர் கர்ணன், செயற்குழு உறுப்பினர் முத்துமணி மதுரை கலெக்டர் பிரவீன் குமாரிடம் அளித்த மனு:
தோப்பூரில் இருந்து கப்பலுார் ரயில்வே மேம்பாலம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், தியாகராஜர் ஆலைமேல்நிலைப்பள்ளி, கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டை, நுகர்பொருள் வாணிபகழக சேமிப்பு கிடங்கு, எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட 20க்கும் மேற்பட்ட அரசு, தனியார் தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. தொழிற் சாலைகளுக்கு செல்லும் கனரக, கன்டெய்னர் வாகனங்கள் ரோட்டை கடக்க இயலவில்லை. பள்ளி, கல்லுாரி மாணவர்களும், அரசு அலுவலகங்கள் செல்வோரும் ரோட்டை ஆபத்தான முறையில் கடக்கின்றனர். இப்பகுதியில் அதிக விபத்து, உயிரிழப்புகளை தடுப்பதற்கு வசதியாக இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

