/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாராயக்கடைகளுக்கு வழங்கப்படும் முக்கியம் பள்ளிகளுக்கு இல்லை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் விளாசல்

ADDED : நவ 17, 2025 02:10 AM
மதுரை: ''வீதிகள் தோறும் சாராயக் கடைகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தில் ஒரு சதவீதம் கூட அரசு பள்ளிகளுக்கு இல்லை. இதுவரை 208 அரசு பள்ளிகள் மூடுவிழா கண்டுள்ளன,'' என, மதுரையில் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக சாடினார்.
அவர் மேலும் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசு பள்ளிகளை ஊக்குவிக்க மாணவர்களுக்கு காலணி முதல் மடிக்கணினி வரை 14 வகை கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்கினார். பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி கல்வியில் புரட்சி படைத்தார்.
அமைச்சருக்கு நேரமில்லை அவரது வழியில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவப்படிப்பை நனவாக்க 7.5 சதவீதம் இட ஒதுக்கீடை கொண்டு வந்தார். ஆனால் இன்று நிலைமை என்ன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேசுக்கு துணை முதலமைச்சர் உதயநிதியின் ரசிகர் மன்ற தலைவராகவும், முதலமைச்சரின் குடும்ப புகழ் பாடும் முதன்மை கவிஞராகவும் சேவை செய்ய நேரம் இருக்கிறது. ஆனால் மாணவர்கள் குறித்து சிந்திக்க நேரமில்லை.
தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டில் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கான மத்திய அரசின் நிதியைக் கூட தமிழக அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இதனால் மாணவர்கள் சேர்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
நாங்கள் (தி.மு.க.,) ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று கூறினர். ஆனால் தமிழகத்தில் வீதிகள் தோறும் சாராய ஆறு தான் ஓடுகிறது. இதனால் கங்கை, காவிரி நதிகள் கூட கண்ணீர் வடிக்கின்றன.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, 172 தொகுதிகளில் 10 ஆயிரம் கி.மீ., எழுச்சிப்பயணம் மேற்கொண்டு தி.மு.க., ஆட்சியின் மக்கள் விரோத செயல்களை தோலுரித்துக் காட்டியுள்ளார். இதனால் மீண்டும் தமிழகத்தில் ஜனநாயகம் மலரும். அப்போது தமிழகத்தின் அவலம் போக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.