/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேவர் சிலைக்கு இடையூறு இல்லாமல் மேம்பாலம்
/
தேவர் சிலைக்கு இடையூறு இல்லாமல் மேம்பாலம்
ADDED : மார் 17, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு இடையூறு இல்லாதவாறு மேம்பாலம் கட்டப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகன காந்தி தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதுகுறித்து கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு பாலத்தின் நேர்பாடு தேவர் சிலையிலிருந்து 25 அடி துாரத்தில் கிழக்குபுறம் வருமாறு பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சந்திப்பின் மையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாலம் கட்டுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இது தொடர்பாக தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

