ADDED : ஜூலை 04, 2025 03:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் -- சென்னை நான்கு வழிச்சாலையின் இருபுறமும் கிராமங்கள் அதிகம். இங்கு பருவத்திற்கேற்ப நெல், எள், சிறுதானிய பயிர்கள் பயிரிடுகின்றனர்.
அதை அறுவடை செய்ததும் நான்கு வழிச்சாலையோரம் உலர்த்தி காய வைப்பது வழக்கமாக உள்ளது. இதனால் டூவீலரில் செல்வோர் ரோட்டின் நடுவே செல்கின்றனர். இரவில் தானியங்களை குவித்து வைத்திருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.