/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உயிரை பணயம் வைத்து செல்லும் இறுதி ஊர்வலம்
/
உயிரை பணயம் வைத்து செல்லும் இறுதி ஊர்வலம்
ADDED : ஜன 22, 2025 08:55 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே சீமானுாத்து ஊராட்சி நல்லிவீரன்பட்டியில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். கிராமத்தின் தெற்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், மயானத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே மதுரை- - போடி ரயில் பாதை அமைந்துள்ளது.
மேற்கண்ட பகுதிக்கு செல்வோர் இப்பாதையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அகல ரயில் பாதையாக விரிவாக்கம் செய்த போது மயானத்திற்கு செல்ல தரைப் பாலம் அமைக்க வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பாலம் அமைக்கப்படாத நிலையில் மயானத்திற்கு இறுதி ஊர்வலம் செல்வோர், இறந்தவர் உடலுடன் ஆளில்லா ரயில் பாதையை ஆபத்தாக கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகம் இதற்கு விரைவில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.