/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
யானைமலை அடிவாரத்தில் சாம்பல் நிற தேவாங்கு
/
யானைமலை அடிவாரத்தில் சாம்பல் நிற தேவாங்கு
ADDED : ஜன 25, 2024 05:24 AM

ஒத்தக்கடை: மதுரைஒத்தக்கடை நரசிங்கம் யானைமலை அடிவாரம்பகுதியில் சாம்பல் நிற தேவாங்குகாணப்படுவதாகவும் அதனை பாதுகாக்க வேண்டும் எனவும் இயற்கை பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: யானைமலை அடிவார பகுதி அடர்ந்த சிறுகாடுகளை கொண்ட பல்லுயிர்வாழிடமாக உள்ளது. 'குல்லாய் குரங்கு' என அழைக்கப்படும் இயல்பாக காணக்கூடிய குரங்குகள்வாழ்கின்றன.
யானைமலையின் அடிவார பகுதியில் உள்ள சிறு புதர் காடுகளில் தேவாங்கு,முள்ளெலி, புனுகு பூனை, மரநாய், கீரி, அணில் உள்ளிட்ட பாலுாட்டி உயிரினங்கள் வாழும்சூழலை கொண்டுள்ளது. இங்கு பல்லுயிர்கள் குறித்த ஆய்வுகள் செய்யப்படவில்லை.இப்பகுதியினர் தேவாங்கு இருப்பதை அறிந்து தகவல் தந்தனர். வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தோம்.
இப்பகுதியில் நிறைய தேவாங்குகள் இருந்ததாகவும், வாழிட அழிப்பு மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அரிதாகிவிட்டதாகவும் தெரிவித்தனர். யானைமலை அடிவாரத்தில் எஞ்சியிருக்கும் தேவாங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும்என கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.