UPDATED : நவ 24, 2026 06:00 PM
ADDED : நவ 24, 2026 06:00 PM

பாலமேடு:
வலையபட்டியில் குளியல்தொட்டியுடன் கூடிய பொது சுகாதாரவளாகம் அமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இங்குள்ள பல வீடுகளில் கழிப்பறை வசதியில்லாததால் திறந்தவெளியையே பயன்படுத்துகின்றனர். இதனால் துர்நாற்றம்வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் குளியல்தொட்டி இல்லாததாலும் மக்கள் தவிக்கின்றனர்.
அப்பகுதி ஆனந்தகுமார்: பல ஆண்டுகளாக இப்பகுதியில் கழிப்பறை, குளியல்தொட்டி இல்லை. மதுரை மாவட்டத்தின் எல்லை கிராமமாக இருப்பதால் தினமும் அரசு பஸ் டிரைவர்கள்,கண்டக்டர்கள் பஸ்சை நிறுத்திவிட்டு இரவு இங்கேயே தங்குவர். முன்பு கிராமசேவைமைய கட்டடத்தின் பின்னால் அமைந்த கழிப்பறையை இவர்கள் பயன்படுத்தினர். தற்போது பராமரிப்பின்றி பாழடைந்து விட்டதால் வேறு வழியின்றி அவர்களும் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். அவர்கள் குளிப்பதற்கான அடிப்படை வசதிகளும் இங்கில்லை. ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
