ADDED : அக் 29, 2025 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே நடுவூரில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதி மணிவண்ணன் கூறியதாவது: இங்கு நடுவூர், காலனி பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். பெரும்பாலான வீடுகளில் கழிப்பிட வசதி இல்லை. இதனால் திறந்த வெளியையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதனால் ரோட்டின் இருபுறமும் மனிதக் கழிவுகளால் நிறைந்து துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. பெண்கள் பகலில் திறந்தவெளியை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். இரவில் நாய்கள் தொல்லை, விஷஜந்து, போதை ஆசாமிகளால் சிரமம் அடைகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பொதுச் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்றார்.

