ADDED : நவ 26, 2025 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: 'சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரத்தில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்' என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
அப்பகுதி லோகநாதன் கூறியதாவது: இங்கு இருநுாறுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கிறோம். பெரும்பாலான வீடுகளில் கழிவறைவசதி இல்லை. திறந்த வெளியையே பயன்படுத்தி வருகிறோம். சாகுபடி காலங்களில் திறந்தவெளியை பயன்படுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது. விஷஜந்துக்கள், தெருநாய்கள், போதை ஆசாமிகளால் பெண்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் பொது சுகாதார வளாகம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

