/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெற்பயிரை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி கூட்டம்
/
நெற்பயிரை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி கூட்டம்
ADDED : அக் 30, 2024 04:23 AM

வாடிப்பட்டி : வாடிப்பட்டி நீரேத்தான் புதுக்கண்மாய், போடிநாயக்கன்பட்டி வடுகர் கண்மாய் பாசன பகுதிகளில் நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இப்பகுதியில் வைகை பெரியாறு பாசனத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இரவில் கூட்டமாக வரும் பன்றிகள் நெற்பயிர்களை சேதப்படுத்துகின்றன.
வடகரை, கட்டக்குளம் கண்மாய் பகுதியில் முகாமிட்டுள்ள பன்றிகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
இவற்றை விரட்டவும், கட்டுப்படுத்தவும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மேற்கண்ட பகுதி நிலங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை பன்றிகள் தினமும் சேதப்படுத்தி செல்வதால் அதிகளவு நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்குகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உள்ளது.
சோழவந்தான் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.