ADDED : மே 27, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கிரீன் பவுண்டேஷன், தானம் அறக்கட்டளை சார்பில் திண்டுக்கல் - நத்தம் ரோடு பாலப்பநாயக்கன்பட்டி மலைவீரன் கோயில் காட்டில் 130வது மரங்கள் அறியும் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கன் கல்லுாரி தாவரவியல் பேராசிரியர் ஸ்டீபன் பல வகை மரங்களை அடையாளம் கண்டு, அதன் மருத்துவ குணங்களை எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை நிர்வாகி சிதம்பரம் செய்தார்.