தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மரங்கள் அறியும் பயணம்

 மரங்கள் அறியும் பயணம்

 மரங்கள் அறியும் பயணம்


ADDED : பிப் 24, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை - நத்தம் ரோட்டில் உள்ள கரந்தமலை கன்னிமார் சுவாமி தீர்த்தக்காட்டில் இலையுதிர் காலத்தில் மரங்களை அறியும் பயணம் நடந்தது. தானம் அறக்கட்டளை, மதுரை கிரீன், எச்.சி.எல். பவுண்டேஷன் ஏற்பாடுகளை செய்தன.

மரங்களின் தன்மை குறித்து பேராசிரியர் (ஓய்வு) ஸ்டீபன் கூறியதாவது: காத்தாடி தனுகு மரம், சதுரக் கள்ளி, இலைக் கள்ளி, வெப்பாலை உசிலமரங்கள், சூரம் பழமரங்கள், பால் கொடி, ஆனை கொள்ளை, மாவுலிங்க மரம், புளிய மரங்கள், தேத்தான் கொட்டை மரங்கள் இங்குள்ளன.

கரந்தமலை மலை தொடர்ச்சியாக திருமலை கேணி செந்துறை, மனக்காட்டூர் பிள்ளையார் நத்தம், துவரங்குறிச்சி வரை பரப்பளவு உள்ளது. கரந்தமலை மேலே மலைக்கிராமங்கள் சில உள்ளன என்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம், விவசாயி மாயழகன் ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us