தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தினமலர் செய்தியால் சுடர்விடும் விளக்கு

தினமலர் செய்தியால் சுடர்விடும் விளக்கு

தினமலர் செய்தியால் சுடர்விடும் விளக்கு


ADDED : பிப் 01, 2024 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம், : தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள மூன்று அணையா விளக்குகளும் மீண்டும் சுடர்விட்டு ஒளிர்கின்றன.

கோயில் ஆஸ்தான மண்டபம், கம்பத்தடி மண்டபம், திருவாட்சி மண்டபங்களில் 24 மணி நேரமும் எரியும் வகையில் அணையா விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தினமும் ஏதாவது ஒரு விளக்கு அணைந்தே இருக்கும்.

கோயில் துணை கமிஷனர் உத்தரவிட்டும் இந்த விளக்குகளை கவனிக்க உள்துறை நிர்வாகத்திற்கு நேரமோ, மனமோ இல்லை. இதையடுத்து மூன்று விளக்குகளையும் தொடர்ந்து எரிவதற்கு ஆவன செய்ய வேண்டும் என, தினமலர் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து அணையா விளக்கை கண்காணிப்பதற்கென ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். சில தினங்களாக அணையா விளக்குகள் தொடர்ந்து சுடர் விடுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us