/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எழுமலை அருகே 3 ஆடுகளை விழுங்கிய மலைப்பாம்பு
/
எழுமலை அருகே 3 ஆடுகளை விழுங்கிய மலைப்பாம்பு
ADDED : பிப் 04, 2024 03:38 AM

எழுமலை : எழுமலை கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். கிராமத்திற்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் மற்றும் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று இவரது ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது வனப்பகுதிக்குள் இருந்து வந்த மலைப்பாம்பு 3 ஆடுகளை விழுங்கி வனப்பகுதிக்குள் சென்றது.
ஆடுகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு முருகன் அந்தப்பகுதியில் பார்த்த போது, மலைப்பாம்பு பருமனான உடலுடன் மரக்கிளையில் நெளிந்தபடி கிடந்துள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
வனத்துறையினர் மலைப்பாம்பை கண்காணித்து வருகின்றனர். ஆடுகள் செரிமானம் ஆனவுடன் பாம்பின் எடை குறைந்து வனப்பகுதிக்குள் சென்றுவிடும் என தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகில் தேவி என்பவரது இரண்டு ஆடுகள் காணாமல் போனது. அதனையும் இந்த மலைப்பாம்பு உணவாக்கியிருக்காலம் என கிராமத்தினர் தெரிவித்தனர்.