/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போக்குவரத்துக்கு பயனற்ற தேசிய நெடுஞ்சாலை
/
போக்குவரத்துக்கு பயனற்ற தேசிய நெடுஞ்சாலை
ADDED : ஜன 10, 2024 06:30 AM

டி.கல்லுப்பட்டி : திருமங்கலம்- - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை தமிழ்நாட்டில் 125 கி.மீ, கேரளாவில் 81 கி.மீ செல்கிறது. இந்த சாலை டி.கல்லுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக கொல்லம் வரை செல்கிறது.
சங்கரன்கோவில், குற்றாலம், சபரிமலை செல்வோர் அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இந்த சாலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
திருமங்கலத்தில் இருந்து குன்னத்தூர் வரை அதே வழித்தடத்திலும், குன்னத்தூர், டி.கல்லுப்பட்டி அவுட்டரில் பைபாஸ் சாலையாகவும் செல்கிறது.
இப்பணிகள் நடப்பதால் குன்னத்தூரில் இருந்து எம்.சுப்புலாபுரம் வரை உள்ள 12 கி. மீ சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
குண்டும் குழியுமாக இந்த சாலை இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. நெடுஞ்சாலைத்துறையினர் இதை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
போர்க்கால நடவடிக்கையாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

