/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பராமரிப்பின்றி புதர்மண்டிய மயானம்
/
பராமரிப்பின்றி புதர்மண்டிய மயானம்
ADDED : ஜன 19, 2026 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் - நகரி ரோட்டில் தச்சம்பத்து பிரிவு அருகே ரிஷபம் ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் மயானம் அமைந்துள்ளது. செடி, கொடிகள் அடர்ந்து காடு போன்று காட்சி அளிக்கிறது. விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக மாறி வருகிறது. போதுமான விளக்குகள் அமைக்கப்படாமல் கும்மிருட்டாக உள்ளது. இதனால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. தண்ணீர் வசதிக்காக அடிகுழாய் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மாற்றி மின் மோட்டாருடன் தொட்டி அமைக்க வேண்டும். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயானத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

