ADDED : ஜன 19, 2026 05:24 AM
சோழவந்தான் ஜன.19-: சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் இரும்பாடி பாலத்தை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
2024ல் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மன்னாடிமங்கலம் - இரும்பாடி இடையே வைகையாற்றில் பாலம் அமைக்கப்பட்டது.
பாலம் கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படவில்லை. இருந்தாலும் பொது மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் கும்மிருட்டாக உள்ளது.
இதைப் பயன்படுத்தி மது பிரியர்கள் பாலத்தை 'பார்'ஆக மாற்றி வருகின்றனர். மாலையில் பணிக்குச் சென்று அவ்வழியாக திரும்பும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால் சமூக விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து பணிகளை முடித்து, பாலத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'விளக்குகள் அமைக்க டெண்டர் விடும் பணிகள் நடக்கிறது.
பணிகள் முடிந்து பாலம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும்' என்றனர்.

