/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விமான நிலைய விரிவாக்கத்தில் புதிய பைபாஸ் ரோடு அவசியம்
/
விமான நிலைய விரிவாக்கத்தில் புதிய பைபாஸ் ரோடு அவசியம்
விமான நிலைய விரிவாக்கத்தில் புதிய பைபாஸ் ரோடு அவசியம்
விமான நிலைய விரிவாக்கத்தில் புதிய பைபாஸ் ரோடு அவசியம்
UPDATED : ஜூலை 25, 2025 04:38 AM
ADDED : ஜூலை 25, 2025 03:29 AM

மதுரை: மதுரையின் வளர்ச்சியில் விமான நிலைய விரிவாக்கம் இன்றியமையாதது. விமான நிலையத்திற்கு கூடுதல் இடங்களை கையகப்படுத்துவது, சுற்றுச்சுவர் கட்டுவது, பெரிய விமானங்கள் வந்திறங்கும் வகையில் ரன்வேயை நீட்டிப்பது என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 620 ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்தப்பட்டு விமான நிலையத்தைச் சுற்றிலும் 15 கி.மீ., தொலைவுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்துள்ளது. ரன்வேயை நீட்டிக்கும்போது ரிங்ரோட்டை தாண்டி 2 கி.மீ., தொலைவுக்கு அமைக்கப்படும். இதனால் ரிங்ரோடு 'கட்' ஆகும். எனவே ரன்வேக்கு கீழே 'அண்டர் பாஸ்' அமைத்து ரிங்ரோடு போக்குவரத்தை தொடரலாம் என யோசனை செய்தனர்.
அதற்கான செல்வு ரூ.600 கோடிக்கு மேலாகும் என்பதால் புதிதாக ரோடு அமைக்க முடிவு செய்துள்ளனர். மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து ரிங்ரோட்டின் 13.6 வது கி.மீ.,ல் துவங்கி தென்பகுதியில் ராம்நகர், குசவன்குண்டு வழியாக அருப்புக்கோட்டை ரோட்டில் கருப்பசாமி கோயில் அருகே இணையும் வகையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் ரோடு அமைய உள்ளது. இதன்மூலம் ரிங்ரோட்டில் செல்லும் வாகனங்கள் கூடுதலாக 8 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ளது.
இதனால் மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை, திருமங்கலம் வழியாக தென்மாவட்டங்கள் செல்லும் பஸ்களுக்கு கூடுதல் தொலைவு, நேரம் தேவைப்படும். விமான நிலையத்தில் இருந்து தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற 15 கி.மீ., தொலைவில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு 25 கி.மீ., பயணிக்க வேண்டும். இது அவசர காலத்திற்கு பாதகமாக அமையும். விமான நிலையத்தை சுற்றி அமையும் பாதுகாப்பு சுவரால் தற்போது போக்குவரத்து நடைபெறும் நிலையூர் - பரம்புபட்டி, பரம்புபட்டி - பெருங்குடி ரோடுகள் அடைபடும் நிலை உள்ளது.
ஏற்கனவே உள்ள திட்டங்கள் மதுரை விமான நிலைய விரிவாக்க பணியை எதிர்பார்த்து ஏற்கனவே 2010ல் ரிங்ரோட்டில்14.6 வது கி.மீ.,யில் மண்டேலா நகருக்கு ஒரு கி.மீ., முன்னதாக ஒரு புதிய ரோடை துவக்கி, வடபகுதியில் பெருங்குடி, எஸ்.என்., கல்லுாரி வழியாக மேற்கு நோக்கி சென்று, விமான நிலையத்தின் மேற்கு பகுதி ரிங்ரோட்டில் சூரக்குளத்தில் முடியும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டது. நில எடுப்பு பணிக்கு ஆயத்தமான நிலையில், இத்திட்டம் ஏனோ நின்று போனது.
இந்நிலையில் இந்த ரோட்டுக்கும் மாற்றாக ரிங்ரோட்டில் 15.4 வது கி.மீ.,யில் மண்டேலா நகரில் இருந்து வடபகுதி விமான நிலைய சுற்றுச்சுவரை அடுத்து எஸ்.என்., கல்லுாரி பின்புறம் வழியாக, ரிங்ரோடு சூரக்குளத்தில் இணையும் வகையில் 5.8 கி.மீ., தொலைவுக்கு ரோடு அமைக்கலாம். இதனால் செலவும், நேரமும் குறையும் என நிபுணர்கள் திட்டம் வகுத்துள்ளனர். போக்குவரத்து நேரம், செலவு குறைவு. இதனால் வீடுகள், கட்டடங்களுக்கு பாதிப்பும் ஏற்படாது என நெடுஞ்சாலைத்துறையினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.