/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மலைமீது ஜொலிக்கும் புதிய ஓம் விளக்கு
/
மலைமீது ஜொலிக்கும் புதிய ஓம் விளக்கு
ADDED : ஜூலை 25, 2025 03:32 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் உச்சிப்பிள்ளையார் மண்டபத்தின் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் வேலுடன் கூடிய புதிய ஓம் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கனவே நியான் பல்புகளால் இருந்த ஓம் மின்விளக்கு அடிக்கடி பழுதாகி எரியாமலும், குறைந்த ஒளியில் மினுக்கியபடி எரிந்தது. அதற்கு பதிலாக 'வேலுடன் கூடிய ஓம்' மின்விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி ஏற்பாட்டில் உபயதாரர் மூலம் ஓம் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. பதின்மூன்றரை அடி உயரம், ஒன்பதரை அடி அகலம், 15 அடி உயரத்துடன் கூடிய இந்த எல்.இ.டி., விளக்கு பக்தர்களின் பார்வையை வெகுவாக கவர்ந்துள்ளது.