/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓராண்டாக திறக்காத புதிய ரேஷன் கடை ரூ.13 லட்சம் வீண்
/
ஓராண்டாக திறக்காத புதிய ரேஷன் கடை ரூ.13 லட்சம் வீண்
ஓராண்டாக திறக்காத புதிய ரேஷன் கடை ரூ.13 லட்சம் வீண்
ஓராண்டாக திறக்காத புதிய ரேஷன் கடை ரூ.13 லட்சம் வீண்
ADDED : அக் 16, 2024 04:43 AM
சோழவந்தான் : வாடிப்பட்டி ஒன்றியம் கருப்பட்டி ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இப்பகுதிக்கான ரேஷன் கடை பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வருகிறது.
இக்கடையில் மழை நேரங்களில் பொருட்களை இருப்பு வைப்பதிலும், மக்கள் வாங்கி செல்வதிலும் பல்வேறு சிரமம் இருக்கிறது.
இதனால் புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.
2023--24 அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி ரூ.13.16 லட்சத்தில் சந்தன மாரியம்மன் கோயில் எதிரே புதிதாக கட்டப்பட்ட கடை ஓராண்டாக திறக்கப்படாமல் உள்ளது.
சமூக ஆர்வலர் லெட்சர்கான் சாகுல் ஹமீது: இக்கடையின் கட்டுமானம் முடிந்து ஓராண்டாகிறது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கடையை திறக்க பலமுறை கோரிக்கை வைத்தும் பயனில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.