
சிக்னல் கிடைக்குமா
மதுரை சின்னக்கடை வீதி, தெற்கு மாரட் வீதி சந்திப்பு சிக்னல் பல மாதங்களாக செயல்படவில்லை. வாகனங்கள் தாறுமாறாக ரோட்டைக் கடப்பதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அசோக், தெற்கு வாசல்.
பாதாள பள்ளங்கள்
மதுரை அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள அம்பிகா கல்லுாரி முதல் 80 அடி மெயின்ரோடு வரை இருபுறமும் தோண்டிய பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அடிக்கடி தவறி விழும் நிலையுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து ரோட்டை சீர்செய்ய வேண்டும்.
- நீலகண்டன், கீழவாசல்.
ரோட்டை சீரமையுங்க
மதுரை காமராஜர் ரோடு பச்சரிசிக்காரத் தோப்பு 5வது தெருவில் சீரமைப்புக்காக பழைய பேவர் பிளாக் கற்கள் அகற்றப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்டன. புதிய கற்கள் பதிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுந்தர மூர்த்தி, காமராஜர் ரோடு.
பஸ் நீட்டிப்பு அவசியம்
மதுரை திருமங்கலம், விருதுநகரில் இருந்து வரும் பஸ்களை சிவரக்கோட்டை, எஸ்.பி.நத்தம் வழியாக வீரப்பெருமாள்புரம் வரை நீட்டிப்பு செய்தால் கள்ளிக்குடி தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், மருத்துவமனை, பள்ளி, கல்லுாரி செல்வோர் பயனடைவர். போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலகுரு, கள்ளிக்குடி.
எரியாத தெருவிளக்குகள்
மதுரை அனுப்பானடி ரோடு பாக்கியம் தெருவில் பல நாட்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலையுள்ளது. ரோட்டில் உள்ள பள்ளம் மேடு தெரியாமல் டூவீலரில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமணரிஷி, அனுப்பானடி.
புகையால் மூச்சு முட்டுது
மதுரை சிம்மக்கல் லட்சுமி நாராயணபுரம் அக்ரஹாரம் பகுதியில் பஜனை மடம் தெருவில் பழைய டயர்களை புதுப்பிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அதன் கழிவுகள், டயர்களை எரிப்பதால் ஏற்படும் புகையால் அருகிலுள்ள குடியிருப்போர், பள்ளி குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜா, சிம்மக்கல்.

