
படிக்கட்டு சேதம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பொது தரிசனம் செல்லும் வழியில் உள்ள இரும்பு படிக்கட்டு சேதமடைந்துள்ளது. இதனை கோயில் நிர்வாகம் உடனே சரி செய்ய வேண்டும்.
- பத்மநாபன், துரைச்சாமி நகர்.
ரோட்டில் கழிவு நீர்
மதுரை துரைச்சாமி நகர் நுழைவாயில் பகுதியில் டூவீலர் சர்வீஸ் செய்யும் கழிவு நீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் நடந்து செல்வோர் மிகுந்த அவதிப்படுகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாரதி இனியன், துரைச்சாமி நகர்.
புதிய டிரான்ஸ்பார்மர் வேண்டும்
வேடர்புளியங்குளம், வி.பி.சிந்தன் குடியிருப்பு பகுதியில் அதிகம் வீடுகள் வந்துவிட்டன. இதனால் குறைந்த மின்னழுத்த பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது. வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்.
- ரேணுகாதேவி, வேடர்புளியங்குளம்.
ரோட்டில் பள்ளம்
மதுரை புதுஜெயில் ரோட்டில் தமிழ்ச்சங்கம் ரோடு வரை ஏராளமான பள்ளங்கள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது
- ராஜன்பாபு, ஆரப்பாளையம் கிராஸ்ரோடு.
சேதமான ரோடு
மதுரை லேபர் பள்ளி தெரு முழுவதும் ரோடுகள் சேதமடைந்துள்ளது. மாணவர்கள் சைக்கிளில் கூட செல்ல முடியவில்லை. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிருஷ்ணமூர்த்தி, மணிநகரம்.

