
ரோட்டில் பாதாளசாக்கடை நீர்
மதுரை பைபாஸ் ரோடு ராம்நகர் 5வது தெருவில் சர்வீஸ் ரோட்டில் பாதாளசாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் தேங்கி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மீனாட்சி சுந்தரம்,எஸ்.எஸ். காலனி
குரங்குகள் தொல்லை
மேலுார் சிவன் கேவில் தெரு, ஆறுமுகம் பிள்ளை தெரு உட்பட 15க்கும் மேற்பட்ட தெருக்களில் குரங்குகள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகானந்தம், மேலுார்
சிக்னல் வேலைசெய்யவில்லை
மாநகராட்சி வார்டு 47 ல் தெற்கு வாசல் சின்னக்கடை வீதி சந்திப்பில் சிக்னல் வேலை செய்யவில்லை. பிளாட்பாரங்களில் வைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
-அசோக், தெற்குவாசல்
இடையூறு குப்பைத்தொட்டி
மாநகராட்சி வார்டு 49 இஸ்மாயில்புரம் 6வது தெரு கடைசியில் தேவையின்றி குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றத்துடன் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
- ராஜ்குமார், இஸ்மாயில்புரம்
நாய்கள் தொல்லை
மாநகராட்சி வார்டு 60 எல்லீஸ்நகர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சிறுவர்களை, டூவீலரில் செல்வோரை துரத்துகிறது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பத்மநாபன், எல்லீஸ்நகர், மதுரை
தெருக்களில் மாடுகள்
மதுரை காமராஜர் சாலை கான்பாளையம் பகுதி, அரசமரம் விநாயகர் கோயில் சந்து போன்ற இடங்களில் மாடுகள் உலா வருகின்றன. நடவடிக்கை தேவை.
- ஸ்ரீனிவாசன், கான்பாளையம்
தெருவிளக்குகள் எரியவில்லை
மாநகராட்சி வார்டு 58 மேலப்பொன்னகரம் 8வது தெருவில் உள்ள விளக்குகள் எரியவில்லை. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இரவில் நடந்து செல்ல அச்சமாக உள்ளது.
- மாரியப்பன், மேலப்பொன்னகரம்
தெருக்களில் கழிவுநீர்
பழைய குயவர்பாளையம் ரோடு காசிமல்லி தோப்பு சாக்கடை வாய்கால் முழுவதும் நிரம்பி தெருக்களில் கழிவுநீர் செல்கிறது. மேலும் பாதுகாப்பற்ற முறையில் வாய்க்கால் உள்ளது. இதற்கு சுற்றுசுவர் கட்டவேண்டும்.
- ராம்பாபு, குயவர்பாளையம்