தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே


ADDED : மார் 07, 2024 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீதிகளில் கழிவுநீர்

மதுரை அம்மன் சன்னதி, வடக்கு சித்திரை வீதி சந்திப்பு பகுதி ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பக்தர்கள் இப்பகுதியில் செல்ல முடியவில்லை. குப்பையை மாநகராட்சியினர் அகற்றினாலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

-சிவராமநாதன், விளக்குத்துாண், மதுரை.

வேகத்தடை தேவை

குலமங்கலம் மெயின் ரோடு, பனங்காடி , வாகைக்குளம் நுழைவுவாயில் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து நடக்கிறது. இந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

- மூகாம்பிகை, அன்பு நகர்.

பாம்புகள் தொல்லை

மதுரை மாநகராட்சி வார்டு 36 முகவை தெருவின் கடைசியில் உள்ள காலி பிளாட்டுகளில் குப்பையைக் கொட்டுகின்றனர். காய்கறிக் கழிவு, சமையல் கழிவுகள் குவிந்து கிடப்பதால் பாம்புகள் உலா வருகின்றன.

- நாகசுப்பிரமணி, கோமதிபுரம்.

பாதாள சாக்கடை அடைப்பு

மதுரை மாநகராட்சி வார்டு 22 மீனாட்சி நகர் 5வது தெருவில் பாதாள சாக்கடை குழாய் அடைப்பு ஏற்பட்டு ரோடுகளில் செல்கிறது. துர்நாற்றம் அதிகமாக இருப்பதால் இப்பகுதியில் செல்ல முடியவில்லை. உடனே நடவடிக்கை தேவை.

-ராம்பாபு, விளாங்குடி.

சேதமடைந்த ரோடு

சிம்மக்கல் காமாட்சிபுரம் அக்ரஹாரத்தில் இருந்து அனுமார் கோயில் செல்லும் வழியில் வாய்க்கால் பகுதி பாதை சேதமடைந்து உள்ளது. இவ்வழியில் ஆட்டோ கூட வருவதில்லை என்பதால் உடனே சரிசெய்ய வேண்டும்.

- ஆனந்தலட்சுமி, காமாட்சிபுர அக்ரஹாரம், சிம்மக்கல்.

ரோட்டில் குப்பை

செக்கானுாரணி வள்ளி நகர் வீதி நுழைவாயிலில் குப்பையை கொட்டுகின்றனர். அருகில் பள்ளி, கோயில்கள் உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

- ராஜபாண்டி, செக்கானுாரணி.

இடையூறு மின்மாற்றி

மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரம் 13 வது தெருவில் பல ஆண்டுகளாக நுழைவாயிலில் மின்மாற்றி இடையூறாக உள்ளது. வேறிடத்தில் மாற்றி அமைக்க பல முறை மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.

- சீனிவாசன், அனுமார்பட்டி

துர்நாற்றம் தரும் ரோடு

மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலை பதினாறு கால் மண்டபம் அருகே துர்நாற்றத்துடன் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பஸ் , ஆட்டோவுக்கு நிற்க முடியவில்லை. மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரியா, தெப்பக்குளம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us