ADDED : மே 07, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6:00 மணியளவிலிருந்து பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. உசிலம்பட்டி -- தேனி ரோட்டில் மாதரை அருகே 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் காற்றால் வேரோடு சாய்ந்தது.
ரோட்டின் ஒரு பகுதியில் விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதித்தது. தீயணைப்புத்துறை வீரர்கள், போலீசார் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றினர்.
இதேபோல் உசிலம்பட்டி - வத்தலகுண்டு ரோடு பஸ் நிறுத்தப் பகுதியில் இருந்த கொடிக்காய் மரம் உடைந்து விழுந்தது. இதனையும் அப்புறப்படுத்தினர்.
மரங்கள் விழுந்த போது அந்தப்பகுதியில் யாரும் இல்லை.

