/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழா

ADDED : ஜன 05, 2025 05:17 AM

திருமங்கலம்:   மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டியில் கரும்பாறை முத்தையா சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அசைவ அன்னதான திருவிழா நடைபெறும். இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பர்.
வேண்டுதல் நிறைவேறியதற்காக கறுப்பு நிற ஆடுகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்குவர். இந்த ஆடுகள் கோயில் பகுதி வயல்வெளிகளில் மேய்ந்தால் சுவாமியே தங்களது தோட்டத்திற்கு வந்ததாக விவசாயிகள், கிராம மக்கள் கருதுகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு 2000 கிலோ அரிசியில் விருந்து தயாரிக்கப்பட்டது. மலைபோல் சாதம் குவிக்கப்பட்டு சுவாமிக்கு படையல் இடப்பட்டு நேற்று பக்தர்களுக்கு அசைவ உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு விட்டு இலையை அப்படியே விட்டுச்சென்றனர். அவை காய்ந்து காற்றில் பறக்கும் வரை பெண்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்ல மாட்டார்கள்.
மதுரை, கருமாத்துார், தேனி, ஆண்டிபட்டி, விருதுநகர் பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.