/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மறுகால் தண்ணீரால் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலம்
/
மறுகால் தண்ணீரால் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலம்
மறுகால் தண்ணீரால் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலம்
மறுகால் தண்ணீரால் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலம்
ADDED : டிச 08, 2025 06:11 AM

திருநகர்: மதுரை விளாச்சேரியில் பொதுமக்கள் அமைத்த தற்காலிக தரைப்பாலம், கண்மாய் மறுகால் நீரில் அடித்து செல்லப்பட்டது.
வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் விளாச்சேரி கண்மாய் நிரம்பும். இக்கண்மாய் மறுகால் வாய்க்காலில் ரேஷன் கடை அருகே தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆதிசிவன் நகர் மொட்டமலை, கீழக்குயில்குடி, சீனிவாசா காலனி நான்கு வழிச்சாலை, அண்ணா பல்கலை செல்வோரும், அப்பகுதிகளில் இருந்து விளாச்சேரி, சவுராஷ்டிரா கல்லுாரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பள்ளிகளுக்கு செல்வோரும், வேலைக்கு செல்வோரும் இந்த பாலத்தை கடந்துதான் சென்றனர்.
இந்த தரைப்பாலம் ஓராண்டுமுன்பு இடிந்து விழுந்தது. அதன்பின் புதிய தரைப்பாலம் கட்டவில்லை. பொதுமக்களே சிமென்ட் குழாய்கள் அமைத்து தற்காலிக பாலம், அமைத்து பயன்படுத்தி வந்தனர். புதிய தரைப்பாலம் அமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
சில தினங்களுக்கு முன்பு வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் விளாச்சேரி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. மறுகால் தண்ணீர் தற்காலிக தரைப்பாலத்தை உடைத்துக் கொண்டு செல்கிறது. தற்போது அந்த தரைப்பாலத்தை பயன்படுத்திய மக்கள் 2 கி.மீ. சுற்றிச் செல்கின்றனர். அங்கு புதிதாக பாலம் கட்ட நடவடிக்கை தேவை என்பது அவர்களின் வலியுறுத்தல்.

