/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணி முடியாத மேம்பாலத்தில் டூவீலரில் சென்றவர் விழுந்து பலி
/
பணி முடியாத மேம்பாலத்தில் டூவீலரில் சென்றவர் விழுந்து பலி
பணி முடியாத மேம்பாலத்தில் டூவீலரில் சென்றவர் விழுந்து பலி
பணி முடியாத மேம்பாலத்தில் டூவீலரில் சென்றவர் விழுந்து பலி
ADDED : அக் 22, 2025 07:58 AM
திருமங்கலம்: திருமங்கலம் அருகே டூவீலரில் சென்றவர்கள் மேம்பாலத்தில் இருந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கின்றன. பலஇடங்களில் மேம்பாலப் பணிகள் நடக்கிறது. பணிகள் நடக்கும் சில பாலங்களில் தடுப்புகள் முழுமையாக வைக்காமல் உள்ளனர்.
நேற்று இரவு நேரம் ராஜபாளையம் ரோட்டில் டூவீலரில் சென்ற 2 வாலிபர்கள் சேடப்பட்டி பிரிவு மேம்பாலத்தில் தவறுதலாக சென்றுள்ளனர். பாலம் முடிவடையாததால் வாகனத்துடன் தவறி விழுந்ததில் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார்.
தாலுகா போலீசார் கூறியதாவது: துவரிமான் காளிமுத்து மகன் விக்னேஷ் 22, மகளிர் சுய உதவி குழுவில் கடன் வசூல் செய்து வந்துள்ளார். அதே பகுதி நண்பர் கண்ணனுடன் 27, நேற்று முன்தினம் இரவு ராஜபாளையம் சென்றார். சேடப்பட்டி பிரிவில் கட்டப்படும் மேம்பாலத்தில் சென்றபோது, மையப் பகுதி சென்ற பின்னரே அடுத்த பகுதியில் பாலம் கட்டப்படவில்லை என தெரிந்துள்ளது. சுதாகரிக்கும் முன்பு பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர். விக்னேஷ் பலியானார்.
இரவு நேரம் என்பதால் விபத்து குறித்து யாருக்கும் தெரியவில்லை. நேற்று அதிகாலை நடைப்பயிற்சி சென்றவர்கள் போலீசுக்கு தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கம்பிகளுக்கு இடையில் சிக்கி இருந்த உடலை எடுக்க முடியாததால் திருமங்கலம் தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில் கம்பியை அறுத்து மீட்டனர். கண்ணன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றனர்.