ADDED : பிப் 13, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : அலங்காநல்லுார் ஒன்றியம் கொண்டயம்பட்டி ஊராட்சியில் வீடு இல்லாத பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டடி மனை கேட்டு வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மா.கம்யூ., கட்சி சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடந்தது.
கிளை செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் பொன்னுத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரன், ஒன்றிய செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் பஞ்சாட்சரம், நிர்வாகிகள் தவமணி, ராசு பங்கேற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.