ADDED : ஆக 21, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-திருமங்கலம் : திருமங்கலம் -- ராஜபாளையம் ரோட்டில் 50 அடி ஆழமும் 40 அடி சுற்றளவும் கொண்ட மெகா சைஸ் கிணறு பாதுகாப்பற்ற முறையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் உயிர் பலி ஏற்படும் சூழல் உள்ளது. கிணற்றை மறைக்க நெடுஞ்சாலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்பகுதியில் பாலம் பணி நடப்பதால் ஒரே ரோட்டை தான் வாகனங்கள் பயன்படுத்துகின்றன.
அந்த இடத்தில் ரோடு வளைவாக இருப்பதால் இரவில் கிணறு இருப்பது தெரிய வாய்ப்பில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் - உசிலம்பட்டி ரோட்டில் காங்கேயநத்தம் பிரிவு அருகே இதேபோன்று ரோட்டோர கிணற்றில் வேன் கவிழ்ந்து 13 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

