ADDED : நவ 11, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை: தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மூலம் எழுமலை உட்பட 50 புதிய ஆதார் சேவை மையங்களை காணொலியில் அமைச்சர் தியாகராஜன் துவக்கி வைத்தார். எழுமலை பழைய பேரூராட்சி அலுவலக கட்டடத்தில் இயங்கும் இம்மையத்தை பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் திறந்து வைத்தார்.
செயல் அலுவலர் ஜெயமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், மையப் பொறுப்பாளர் சண்முகஜோதி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

