/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து கண்மாய்களுக்கு வைகை நீர் திறப்பு மகிழ்ச்சியில் விவசாயிகள்

ADDED : நவ 11, 2025 03:45 AM
திருப்பரங்குன்றம்: நவ. 11-: திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை அணை நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பானாங்குளம், சேமட்டான்குளம், செவ்வந்திகுளம், குறுக்கட்டான், தென்கால், நிலையூர் பெரிய கண்மாய்கள் தண்ணீர் மூலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் இக்கண்மாய்கள் நிரம்பும். இந்தாண்டு போதிய மழையின்றி கண்மாய்கள் வறண்டன.
தற்போது பெய்துவரும் மழையால் கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் உள்ள விவசாயிகள் மட்டுமே நெல் நடவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவுமுதல் குன்றத்து கண்மாய்களுக்கு நிலையூர் கால்வாய் வழியாக வைகை அணை நீர் திறக்கப்பட்டது. இதனால் இதுவரை விவசாய பணிகளை துவக்காதோர் நெல் நாற்றங்கால் அமைக்க தயாராகி வருகின்றனர்.