ADDED : ஆக 31, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கப்பலுார் தொழிலதிபர்கள் சங்கம், மதுரை லயன்ஸ் கிளப் ஆப் மெஜஸ்டிக், ஆதார் ஆணையம் இணைந்து நடத்தும் ஆதார் கார்டில் திருத்தம் செய்யும் முகாம் செப். 1ல் கப்பலுார் தொழிலதிபர்கள் சங்க அரங்கில் நடக்க உள்ளது.
இதில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பிறந்த தேதி திருத்தம் உள்பட அனைத்து திருத்தங்களும் செய்யப்பட உள்ளது.
பொதுமக்கள் மற்றும் கப்பலுார் தொழிற்பேட்டை நிறுவன தொழிலாளர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என கப்பலுார் தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாத ராஜா தெரிவித்தார்.