மதுரை-ராமேஸ்வரம் இடையே ஆடி அமாவாசை சிறப்பு ரயில்
மதுரை-ராமேஸ்வரம் இடையே ஆடி அமாவாசை சிறப்பு ரயில்
ADDED : ஆக 05, 2026 03:37 AM
அ நிறம் | அளவு
மதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை -- ராமேஸ்வரம் இடையே 14 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆக. 11 இரவு 11:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06103), மறுநாள் அதிகாலை 2:30 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். மறுமார்க்கத்தில் ஆக.12 அதிகாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06104), அன்று காலை 6:00 மணிக்கு மதுரை வரும்.
ரயில் (06103), மதுரை கிழக்கு, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஸ்டேஷன்களில் நின்று செல்லும். ரயில் (06104), ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஸ்டேஷன்களில் மட்டும் நின்று செல்லும்.
