/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜூலை 27 முதல் மீனாட்சி கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா
/
ஜூலை 27 முதல் மீனாட்சி கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா
ஜூலை 27 முதல் மீனாட்சி கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா
ஜூலை 27 முதல் மீனாட்சி கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா
ADDED : ஜூலை 05, 2025 06:14 AM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடிமுளைக்கொட்டு திருவிழா ஜூலை 27 முதல் ஆக.,5 வரை நடக்கிறது.
இக்கோயிலில் மாதந்தோறும் திருவிழா நடக்கிறது.
இதில் அம்மனுக்கு மட்டும் ஆடிமுளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்ஸவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா நடக்கும்.
அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு ஜூலை 27 முதல் ஆக.,5 வரை ஆடிமுளைக்கொட்டு திருவிழா நடக்கும். விவசாயம் வளம் பெறவும், நாடு செழிக்கவும் வகை செய்யும் ஐதீகத்தில் அமைந்ததே இத்திருவிழா.
திருவிழா நாட்களில் தினமும் அம்மன் ஆடி வீதியில் எழுந்தருளி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார்.
நாதஸ்வர கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இசை நிகழ்த்தி அம்மனை சேர்த்தி சேர்ப்பர்.
ஏழாம் நாளான ஆக.,2 இரவு வீதிஉலா முடிந்து உற்ஸவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடக்கும்.