ADDED : ஆக 17, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஜெய்ஹிந்த்புரம் கிளை சார்பில் ஆடிப்பூர வைபவம் நடந்தது.
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், திருப்பாவை, வாரணம் ஆயிரம் பாசுரங்கள் பக்தர்களால் பாடப்பட்டன.
ஆண்டாளிடமிருந்து பெருமாளுக்கு மாலை சாற்றி, திருவாராதனம் முடிந்து பெருமாள் பிரசாதத்தை ஆண்டாளுக்கு சமர்ப்பணம் செய்தனர். உலகில் நோய் நொடியின்றி வாழவும், தர்மம் செழிக்கவும் பூஜை செய்யப்பட்டது. கிளை துணைத் தலைவர் ஜெகநாதன், பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், ஆலோசகர் வெங்கட்ராமன், மகளிர் அணி செயலாளர் ராஜம் மீனாட்சி, இணைச் செயலாளர்கள் உமா, சித்ரா, செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், முத்துலட்சுமி, மஞ்சுளா, உத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும் வளையல் பிரசாதம் வழங்கப்பட்டது.
