UPDATED : ஆக 17, 2026 06:59 PM
ADDED : ஆக 17, 2026 06:51 PM
மதுரை:மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது. இதில் சுந்தராஜன்பட்டி ரைசிங் சாம்பியன்ஸ் அகாடமி மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.
ஆடவர் 19 வயது பிரிவு 51 கிலோ எடை பிரிவில் சூர்யாநகர் செவன்த்டே பள்ளி விக்னேஸ்வரன் தங்கம் வென்றார். மகளிர் 19 வயது 44 கிலோ எடை பிரிவில் லுார்து அன்னை பள்ளி இசைவாணி தங்கம், 17 வயது 46 கிலோ பிரிவில் ஓ.சி.பி.எம். பள்ளி சாதனாஸ்ரீ தங்கம், ஜீவிதா 38 கிலோ பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
17 வயது 42 கிலோ பிரிவில் உலகனேரி அரசுப் பள்ளி ச. ஜீவிதா வெண்கலம், 14 வயது 29 கிலோ பிரிவில் சுந்தரராஜன் பள்ளி நந்தித்தா வெண்கலம் வென்றனர். அகாடமி தலைவர்கள் சுந்தரகண்ணன், சரவணன், அமெச்சுர் மதுரை ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ சங்கத் தலைவர் நாராயணன், பயிற்சியாளர் கவுரி சங்கர் பாராட்டினர்.
