UPDATED : ஆக 16, 2026 06:54 PM
ADDED : ஆக 16, 2026 06:51 PM
மதுரை: மதுரை தமுக்கம் 'ஏசி' அரங்கில் பி.என்.ஐ., சாணக்யாஸ் நடத்தும் 'ஆதிரை அழைக்கிறாள்' - மெகா வர்த்தக எக்ஸ்போ ஆகஸ்ட் 17 உடன் நிறைவு பெறுகிறது.
நேற்று முன்தினம் விஷால் புரமோட்டர்ஸ் சேர்மன் இளங்கோவன் எக்ஸ்போவை திறந்து வைத்தார். பி.என்.ஐ., சாணக்யாஸ் உறுப்பினர்கள், விருந்தினர்கள் பங்கேற்றனர்.
அரங்கில் 100 ஸ்டால்களில் கட்டுமான பொருட்கள் முதல் கல்யாண விழாக்கள் வரை பொருட்களை அள்ளலாம். உணவுகளை ருசிக்க தனியாக 20 புட் கோர்ட்கள் அமைந்துள்ளன. குழந்தைகளுக்கான பல்வேறு தனித்திறன் போட்டிகள், கருத்தரங்கு, பட்டிமன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அதிர்ஷ்டப் பரிசுகள், சிறப்பு பம்பர் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம் காத்திருக்கிறது. இன்று காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
டைட்டில் ஸ்பான்சர்: தக் ஷா பர்னிச்சர், கோ ஸ்பான்சர்கள்: ப்ளூமேக் டைமண்ட், கர்லோப்ளக்ஸ் மேட்ரஸ், பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, மதி மொபைல்ஸ்.
