தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆவின் சிறு பால் பண்ணை திட்டம் :124 உற்பத்தியாளருக்கு கடனுதவி

ஆவின் சிறு பால் பண்ணை திட்டம் :124 உற்பத்தியாளருக்கு கடனுதவி

ஆவின் சிறு பால் பண்ணை திட்டம் :124 உற்பத்தியாளருக்கு கடனுதவி


UPDATED : ஆக 31, 2026 10:15 PM

ADDED : ஆக 31, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 10:15 PM ADDED : ஆக 31, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை ஆவின் சார்பில் சிறு பால் பண்ணைத் திட்டம் சார்பில் 124 உற்பத்தியாளர்களுக்கு ரூ.2.50 கோடிக்கு கடனுதவி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழக அரசின் இத்திட்டத்தில் மதுரை ஆவினுக்கு செப்.31 க்குள் 100 உற்பத்தியாளர்களுக்கு கடன் உதவி ஏற்பாடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்பேரில் 84 பேருக்கு கடனுதவி அளிக்கப்பட்டிருந்தது. நேற்று ஒரே நாளில் மாவிலிப்பட்டி, கீழப்பட்டி, மேலஉரப்பனுார் கிராமங்களின் 40 உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்கி ஆவின் இலக்கை கடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார். ஆவின் பொது மேலாளர் முத்துமாதவன், உதவிப் பொது மேலாளர் நந்தகோபால் (கொள்முதல் மற்றும் உள்ளீடு), கடனுதவி செய்த வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

நந்தகோபால் கூறுகையில், இத்திட்டத்தில் உற்பத்தியாளர்களுக்கு முதற்கட்டமாக தலா 2 மாடுகள், 6 மாதங்களுக்கு பின் அடுத்தகட்டமாக தலா 2 மாடுகள் வழங்கும் வகையில் மொத்தம் ரூ.2.50 கோடிக்கு கடனுதவி ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் பால் கொள்முதல் அதிகரிக்கும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us