UPDATED : ஆக 31, 2026 10:15 PM
ADDED : ஆக 31, 2026 07:41 PM
மதுரை: கண்ணனேந்தல் பூமிநாதன் 56. இவர் அப்பகுதி 11 வயது சிறுமியிடம் ஆபாசமாக செய்கை காட்டினார். இவரது மகன் கட்டட தொழிலாளியான சங்கர் 27, சில்மிஷத்தில் ஈடுபட்டார். இருவரையும் தல்லாகுளம் மகளிர் இன்ஸ்பெக்டர் ஹேமமாலா 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
பேஸ்புக்கில் பாசம்: ரூ.1.55 'அபேஸ்'
மதுரை: கூடல்நகர் சுகர்ணரமணி. இவரது பேஸ்புக் மெசேஜ்ஞ்சரில் 'ஹாய்' என ஒருவர் அனுப்பினார். யார் என விசாரித்தபோது சுகர்ணரமணி அண்ணனின் நண்பர் என்றார். இதை நம்பி தகவல்களை பரிமாறி வந்தனர். இந்நிலையில் தனது 10 வயது மகளின் பிறந்தநாளுக்காக பரிசு அனுப்பியதாக அந்நபர் கூறினார். இதைதொடர்ந்து டில்லியில் இருந்து பேசுவதாக கூறிய சிலர், பரிசுப் பொருளுக்குள் நகைகள் இருப்பதாகவும், அதை பெற பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர். இதை நம்பி மொத்தம் ரூ.1.55 லட்சம் அனுப்பி ஏமாந்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* வியாபாரி பலி: டாக்டர் மீது வழக்கு:
உசிலம்பட்டி: வி. பெருமாள்பட்டி காய்கறி வியாபாரி ராமு 58. நேற்று முன்தினம் இரவு பேரையூர் ரோட்டில் உள்ள நகராட்சி மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நடந்து சென்றபோது எதிரே வந்த கார் மோதி இறந்தார். காரை ஓட்டி வந்த மதுரை டாக்டர் பிரவீன்குமார் மீது உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வீடுபுகுந்த திருடர்கள்
திருமங்கலம்: எட்டுநாழி புதுார் டிப்பர் லாரி உரிமையாளர் சக்தி குமார் 28, மனைவி அருணா தேவி. நேற்று முன்தினம் காற்றுக்காக கதவை திறந்து வைத்து இருவரும் துாங்கினர். இரவு 2:00 மணிக்கு வீட்டுக்குள் சத்தம் கேட்டு அருணா தேவி எழுந்த போது அடையாளம் தெரியாத இருவர் வீட்டுக்குள் இருந்தது தெரிந்தது. அவர் சத்தமிட்டதால் இருவரும் தப்பி ஓடினர். பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் வந்தனர். சக்திகுமார் வீட்டில் இருந்து வெளியே வந்து டூவீலரில் தப்ப முயன்ற உலகாணி சரவணகுமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பிய அவரது மாமா சரத்குமாரை தேடி வருகின்றனர்.
