UPDATED : ஆக 31, 2026 10:14 PM
ADDED : ஆக 31, 2026 07:41 PM
செப். 1
கோயில்
* சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணாநகர், மதுரை, ஒப்புரவு தினத்தை முன்னிட்டு குருமட அதிபர் சேவியர் அருள்ராயனின் திருப்பலி, காலை 11:30 மணி, செயின்ட் மேரிஸ் சர்ச் யேசு சபை குழுமம் வழங்கும் திருப்பலி, மாலை 6:00 மணி.
* சந்தனக்கூடு விழா: தர்ஹா, கோரிப்பாளையம், மதுரை, பஷீர் உஸ்தாத் வழங்கும் உருது கவ்வாலி கச்சேரி, இரவு 8:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தி: தெய்வ நெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - சுவாமி வேதாந்த ஆனந்தா சரஸ்வதி, காலை 6:30 மணி, பரமேஸ்வரன் குழுவின் நாதஸ்வர மங்கல இசை, தலைமை: சுவாமி சுந்தரானந்தா சரஸ்வதி, சிறப்பு விருந்தினர்: கவிதா ஜவஹர், மாலை 6:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராதா கல்யாண வைபவம், அஷ்டபதி பஜனை: நிகழ்த்துபவர் - கடையநல்லுார் பிரகாஷ் பாகவதர் குழு, நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மதியம் 2:00 மணி.
பள்ளி, கல்லுாரி
* நுண்ணறிவு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவோர் மூலம் எதிர்காலத்திற்கு தயாரான நிறுவனங்களை உருவாக்குதல் - இணையவழி ஆசிரியர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: இந்தியாவின் எமிரேட்ஸ் என்.பி.டி., வங்கி முன்னாள் தலைமை செயல்பாட்டு அதிகாரி சேதுராமன் சாத்தப்பன், மாலை 6:30 மணி.
* உயிரியல் மருத்துவப் பரிசோதனை, தரக்கட்டுப்பாட்டின் எதிர்கால வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் - கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பெங்களூரு பிளாஸ்மாஜென் பயோசயின்ஸ் நிறுவன மூத்த நிர்வாக அலுவலர் ஆனந்தராஜ், ஏற்பாடு: நுண்ணுயிரியல் துறை, காலை 10:00 மணி, முதுகலை வணிகவியல் கல்விக்கழக தொடக்கவிழா - சிறப்பு விருந்தினர்: திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி இணை பேராசிரியர் செல்லபாண்டி, ஏற்பாடு: முதுகலை மற்றும் வணிகவியல் ஆராய்ச்சித் துறை, காலை 10:30 மணி.
பொது
* பூலித்தேவன், தமிழரசன், அனிதா நினைவேந்தல் கூட்டம்: ஏ.பி., வளையாபதி திருமண மண்டபம், ஒத்தக்கடை - திருமோகூர் ரோடு, மதுரை, தலைமை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காலை 10:00 மணி.
மருத்துவம்
* குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
