ADDED : அக் 16, 2024 05:06 AM
மதுரை, : மதுரை, திருப்பரங்குன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாம் படத்திற்கு உதவித் தலைமை ஆசிரியர் ஆதிஞானகுமரன் தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மரியாதை செலுத்தினர். முதுகலை ஆசிரியர் முரளிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் அண்ணாமலை, வேட்டையார், காளிதாசன், குலசேகரன், அரவிந்தன், ஆனந்தராஜ், குப்புசாமி, துளசிதாஸ், ரவிச்சந்திரன், கந்தராஜ், விளையாட்டு குழு தலைவர் பாஸ்கர பாண்டி பங்கேற்றனர்.
உசிலம்பட்டி: ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பாக நடந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி அக்னிச்சிறகுகள் அறக்கட்டளை அரசு போட்டித் தேர்வு இலவச பயிற்சி மையம் சார்பாக கொண்டாடினர். தண்டாயுதபாணி, ராஜமாணிக்கம் மற்றும் பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.