/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குரூப் 4 வினாத்தாள் ஏ.பி.வி.பி., கண்டனம்
/
குரூப் 4 வினாத்தாள் ஏ.பி.வி.பி., கண்டனம்
ADDED : ஜூலை 12, 2025 04:23 AM
மதுரை : மதுரையில் இன்று (ஜூலை 12) நடக்கும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 க்கான வினாத்தாளை பாதுகாப்பின்றி எடுத்துச் சென்றதற்கு ஏ.பி.வி.பி., அமைப்பின் மாநில இணைச் செயலாளர் விஜயராகவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 3935 பணியிடங்களுக்கு 38 மாவட்டங்களில் இருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். இச்சூழலில் மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ள குரூப் 4 தேர்வு வினாத்தாள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் தனியார் பஸ்சில் ஏ4 தாளால் கதவில் ஒட்டி 'சீல்' வைத்து அனுப்பியுள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அனுப்பிய வினாத்தாள் பாதுகாப்புடன் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

