/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீட்டில் 'ஏசி' வெடித்தது: தம்பதி தப்பினர்
/
வீட்டில் 'ஏசி' வெடித்தது: தம்பதி தப்பினர்
ADDED : ஆக 06, 2025 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை ஒத்தக்கடை அய்யப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 57. தனியார் மருத்துவமனை பி.ஆர்.ஓ.
நேற்றிரவு 'ஏசி'யை அணைத்து விட்டு துாங்க சென்ற சிறிது நேரத்திலேயே பயங்கர சத்தத்துடன் 'ஏசி' வெடித்து சிதறி வீட்டில் இருந்த பேன், மெத்தை எரிந்தது.
மனைவி தேவியுடன் அறையை விட்டு உடனே வெளியேறியதால் இருவரும் உயிர் தப்பினர்.
தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.